உறுப்புரிமை
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் விதிகள், கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைக் குடிமக்களாக உள்ள, வேறு அரசியற் கட்சிகள் எதிலும் உறுப்பினராக அல்லாத ஆண், பெண் இருபாலாரும் இணைந்துகொள்ளலாம்.
பொதுச்சபை உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடனும், மத்திய குழுவின் ஏற்புடனும் அங்கத்தவராக ஒருவர் இணைந்துகொள்ளலாம்.
ஆண்டுச் சந்தா நூறு ரூபா, ஆயுட் சந்தா ஆயிரம் ரூபா
கட்சியின் விதிகள், கொள்கைகளை மீறும் உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய குழுவினால் நீக்கம் செய்யப்படலாம்.