தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின்

பசுமை அறிவொளி நிகழ்ச்சி நாவாந்துறையில்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களை வலுவூட்டும் நோக்கில் முன்னெடுத்து வரும் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.02.2026) நாவாந்துறை சென்.மேரிஸ் சனசமூக நிலைய முன்றிலில் நடைபெற்றது.

பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளவாளராக மென்பொருள் பொறியியலாளர் வி. திவாகரன் கலந்துகொண்டிருந்தார். பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ், யாழ். மாநகரசபையின் கௌரவ உறுப்பினர் அ. அன்ரன் சாள்ஸ், சமூகச் செயற்பாட்டாளர் செ. றேகன் ஆகியோரும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மாணவர்கள் அனைவருக்கும் கனடா, ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் அனுசரணையுடன் மாணவர் குறிப்பேடுகளும், செல்வன் சேயோன் ராஜா சுப்பிரமணியன் அனுசரணையில் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.