சூழல் பொது அறிவுப் பரீட்சை | පරිසරය පිළිබඳ සාමාන්ය දැනුම පරීක්ෂණය
General Knowledge Examination on Environment
2022
பசுமை அமைதி விருதுகள் - හරිත සාම සම්මාන - Green Peace Awards 2024
சூழல் பொது அறிவுப் பரீட்சை | පරිසරය පිළිබඳ සාමාන්ය දැනුම පරීක්ෂණය
General Knowledge Examination on Environment
2022
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
Tamil National Green Organization
பசுமை அமைதி விருதுகள் | Green Peace Awards
சூழல் பொது அறிவுப் பரீட்சை | General knowledge examination on environment
2022
பரீட்சைப் பெறுபேறுகள் | Examination results
பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை - 2509
The number of students who applied for the examination
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை - 777
The number of students who sat for the examination
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை - 474
The number of students who passed in the Examination
புள்ளிகளும் தரங்களும் | Marks and Grades
70 - 100 - A விசேட சித்தி | Distinction Pass
60 - 69 - B அதிதிறமைச் சித்தி | Very Good Pass
50 - 59 - C திறமைச் சித்தி | Credit Pass
35 - 49 - S சாதாரண சித்தி | Ordinary Pass
0 - 34 - W நலிவு | Weak
பெறுபேற்றுத்தாளில் சித்தியடைந்தவர்களின் பெயர் விபரங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன.
Only the names and details of the successful candidates are included in the result sheet.
சித்தியடைந்த மாணவர்களில் விருதுகளுக்குரியவர்களின் பெயர்களும் சிறப்புப் பரிசுக்குரிய வர்களின் பெயர்களும் பின்னர் அறியத்தரப்படும்.
The names of the award winners and the special prize winners will be announced later.
சித்தியடைந்த அனைவருக்கும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Green Peace Certificates will be awarded to all who pass.
வழிகாட்டுதல்கள் | Guidelines for Candidates
01.இது முற்றாகக் கணினி மயப்படுத்தப்பட்ட, கையாளுவதற்கு இலகுவான நிகர்நிலைப் பரீட்சை ஆகும்.
02. பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குப் பாதுகாப்பான வீட்டுச்சூழலில் இருந்தவாறு இடையூறு இல்லாத இணைய இணைப்பினைக் கொண்ட கணினி அல்லது திறன்பேசியில் தோற்ற முடியும்.
03. வினாப்பக்கத்துக்குள் நுழைய முன்பாகப் பரீட்சார்த்திகள் தங்கள் சுயவிபரங்களைப் பதிவு செய்தல் கட்டாயமானதாகும்.
04. பரீட்சைக்கான நேரம் 90 நிமிடங்கள் ஆகும்.
05. இப்பரீட்சை 100 பல்தேர்வு வினாக்களைக் கொண்டதாகும்.
06. தரம் 9 - 13 வரையான பரீட்சார்த்திகள் அனைவரும் எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
07. ஒவ்வொரு சரியான விடைக்கும் 1 புள்ளி வழங்கப்படும்.
08. வினாக்களுக்கு விடையளித்த பின்னர் இறுதியிலுள்ள சமர்ப்பி பொத்தானை (Submit) அழுத்திச் சமர்ப்பித்தல் கட்டாயமானதாகும்.
09. பரீட்சைப் பெறுபேறுகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணையத்தளத்தில் வெளியாகும். (https://www.tamilnationalgreen.org)
10. பரீட்சார்த்திகள் நேர்மையாகவும், அறம் சார்ந்தும், அறிவுறுத்தல்களைப் பின்பற்றியும் பரீட்சைக்குத் தோற்றுமாறு வேண்டப்படுகிறார்கள்.
11. சிறப்புப் பரிசுகளையும் விருதுகளையும் தீர்மானிப்பதற்குத், தேவையேற்படின் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி மாணவர்கள் இரண்டாவது சுற்றுப் பரீட்சைக்கும் தோற்ற நேரிடலாம்.
12. தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நடாத்தப்படவுள்ள பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழாவின் போது வழங்கப்படும்.
Guidelines for Candidates
01.This is a fully computerized, user Friendly examination.
02. Candidates can appear for this examination on a computer or smartphone with uninterrupted internet connection as in a safe home environment.
03.Candidates are required to register their details before entering the questionnaire.
04.The time duration for the examination is 90 minutes.
05.The examination consists of 100 multiple choice questions.
06.All Grade 9 - 13 candidates must answer all questions.
07.Each correct answer will be awarded 1 point.
08.After answering the questions, it is mandatory to press the Submit button at the end.
09.The results of the examination will be published on the website of the Tamil National Green Organization. (https://www.tamilnationalgreen.org)
10.Candidates are requested to appear for the exam honestly, ethically and following the instructions.
11.To determine the special prizes and awards, a group of students who are selected on the basis of points as required may appear for the second round of examinations.
12. Prizes for the selected students will be given during the Green Peace Award Ceremony event to be held by the Tamil National Green Organization.
பசுமை அமைதி விருதுகள்
காலநிலை மாற்றங்களும் கொரோனாப் பெருங்கொள்ளை நோயும் இயற்கையை நாம் அழித்தால் இயற்கையால் நாம் அழிவோம் என்ற வலுவான பாடத்தை எமக்குப் போதித்துள்ளன. இயற்கையை நாம் மென்மேலும் சூறையாடினால் பெரும் பிரளயத்துக்குள் உலகம் தள்ளப்படும் என்று ஐக்கியநாடுகள் சபை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி இயற்கைச் சூழலை நாம் அபிவிருத்தியின் பெயராலும் உலகமயமாக்கலின் பெயராலும் தொடர்ந்து சூறையாடி வருகிறோம்.
இந்தச் சூறையாடலை நிறுத்திச் சூழலுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச் செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கும் சிறந்த சூழற் செயற்பாட்டாளர் ஒருவருக்கும் பசுமை அமைதி விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகின்றது.
மாணவர்களுக்கான பசுமை அமைதி விருதுகள் - 2022
மாணவர்களிடையே பசுமை அமைதி விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு சூழல் பொது அறிவுப் பரீட்சை இணையவழியில் நடாத்தப்படும்.
இப்பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும், இலங்கையை வதிவிடமாகக் கொண்ட மாணவர்கள் எவரும் தோற்ற முடியும்.
இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்புபவர்கள் www.tamilnationalgreen.org இணையத்தளத்தின் ஊடாக 05.10.2022 இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
பரீட்சை இணையவழியூடாக 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரம் காலை 6.00 மணி தொடங்கி 7.30 மணிவரை நடைபெறும்..
தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடைபெறும் இப்பரீட்சை 100 பல்தேர்வு வினாக்களைக் கொண்டிருக்கும்.
பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.
இவர்களிலிருந்து, பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் முதல் 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதிச் சான்றிதளோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
இவர்களில் முதல் 3 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ், சிறப்புப் பரிசுகளுடன் பசுமை அமைதி விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். முதலாம் இடத்தைப் பெறும் மாணவர் 1 பவுண் தங்கப் பசுமை அமைதி விருதும், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர் வெள்ளிப் பசுமை அமைதி விருதும், மூன்றாம் இடத்தைப் பெறும் மாணவர் வெண்கலப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்.
இப் பசுமை அமைதி விருதுகள் சூழலியல் ஆசான் க. சி. குகதாசன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்படும்.
சிறப்புப் பரிசுகளையும் விருதுகளையும் தீர்மானிப்பதற்குப் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி மாணவர்கள் தேவையேற்படின் இரண்டாவது சுற்றுப் பரீட்சைக்கும் தோற்ற நேரிடலாம்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நடாத்தப்படும் பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
சிறந்த சூழற்செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருது - 2022
சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல் நேயச் செயற்பாடுகளில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக உழைத்து வரும் தனிநபர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பரிந்துரையில் தெரிவு செய்யப்பட்டு சிறந்த சூழற்செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருதும் ஒரு இலட்சம் ரூபா பொற்கிளியும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்.
இப்பசுமை அமைதி விருது தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்த விருதாக வழங்கப்படும்.
சிறந்த சூழற் செயற்பாட்டாளர் ஒருவரைப் பரிந்துரை செய்ய விரும்புபவர்கள் அவர் பற்றிய விபரங்களைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், இல. 109, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது greentamils5@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
பரிந்துரைகளை அனுப்பி வைப்பதற்கான முடிவுத் திகதி 31.10.2022